Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பள்ளி வேலை நேரத்தில் ஆசிரியர்கள் வெளியே செல்ல தடை

பள்ளி வேலை நேரத்தில் ஆசிரியர்கள் வெளியே செல்ல தடை

பள்ளி வளாகத்தில் அசாதாரண நிகழ்வுகள் ஏற்பட்டால், அவற்றை உடனடியாக உயர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி வேலை நேரத்தில் வளாகத்தை விட்டு வெளியேற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மதிய உணவு இடைவேளையிலும் இந்த கட்டுப்பாடு பொருந்தும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி வெளியிட்ட சுற்றறிக்கை: 

பள்ளி வேலை நேரத்தில் ஆசிரியர்கள் யாரும் வளாகத்தை விட்டு வெளியேறக் கூடாது. பள்ளி வளாகத்தில் அசாதாரண நிகழ்வுகள் ஏற்பட்டால், அவற்றை உடனடியாக உயர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

பள்ளிகளில் ஒழுங்கீனப் பிரச்சினைகள் ஏற்பட்டால், தலைமை ஆசிரியர்கள் தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது. சம்பவம் குறித்து மாவட்டக் கல்வி அலுவலர் அல்லது முதன்மைக் கல்வி அலுவலருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். பின்னர் அவர்களின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி வேலை நேரத்தில் ஆசிரியர்கள் வளாகத்தை விட்டு வெளியே செல்வதால், மாணவர்களைக் கண்காணிப்பதில் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படும் புகார்களின் பின்னணியில் இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மதிய உணவு இடைவேளையின்போது மாணவர்களிடையே ஏற்படும் மோதல்கள் மற்றும் எதிர்பாராத விபத்துகளைத் தடுக்க இந்த நடவடிக்கை உதவும் என கருதப்படுகிறது.

முந்தைய செய்தி
இரு மடங்குக்கும் மேல் அதிகரித்தது வேதாந்தா நிகர லாபம்
அடுத்த செய்தி
3 புதிய ஆலைகளை அமைக்க ரூ.1,250 கோடி முதலீடு

தொடர்புடைய செய்திகள்